6 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு அதிரடி!

6 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் 6 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 6  காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  அடுத்ததாகக் கடந்த 6-ம் வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகளைத் தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது. இந்நிலையில் மீண்டும் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சைபர் க்ரைம் எஸ்.பி.யாக இருந்த அசோக்குமார், கோவை போக்குவரத்துக் காவல்துறை ஆணையராகவும், கோவை போக்குவரத்துக் காவல் ஆணையர் மதிவாணன், கோவை வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராகவும், கோவை வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இருந்த மாதவன், சென்னை சைபர் க்ரைம் எஸ்.பி.யாகவும், உத்தமபாளையம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஸ்ரோயா குப்தா, விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் பயிற்சி முடித்த 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in