பூட்டப்பட்ட பாதுகாவலர் அறை; அரசு காப்பகத்திலிருந்து தப்பிய 6 சிறுமிகள்: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி!

அரசு காப்பகம்
அரசு காப்பகம்அறை பூட்டப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி: காஞ்சிபுரம் அரசு காப்பகத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம்!

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு காப்பகத்திலிருந்து அதிகாலையில் 6 சிறுமிகள் பாதுகாவலர் அறையை பூட்டிவிட்டு தப்பியோடியுள்ள சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில், இரவு பணியிலிருந்த பாதுகாவலர் அறையை பூட்டிவிட்டு அதிகாலையில் 6 சிறுமிகள் காப்பகத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். காலை பாதுகாவலர் கதவைத் திறக்க முயன்றபோது கதவு வெளிப்பக்கமாக பூட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சக மாணவிகளை அழைத்து கதவை திறந்தபோது 6 பெண்கள் காப்பகத்திலிருந்து தப்பியோடியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிவகாசி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in