கண் தானத்தை வலியுறுத்தி 5-ம் வகுப்பு மாணவி உலக சாதனை

கண் தானத்தை வலியுறுத்தும் விதமாக யோக செய்து சாதனை
மாணவி ஹர்சிதா
மாணவி ஹர்சிதாகண் தானத்தை வலியுறுத்தும் விதமாக யோக செய்து சாதனை

சென்னையை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி கண் தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கண்ணை கட்டிக்கொண்டு 5 அடி தொங்கும் வளையத்தில் 17 நிமிடம் யோகா செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த்- ராஜேஸ்வரி தம்பதியின் 9 வயது மகள்  ஹர்சிதா. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். யோகா மீது ஆர்வம் கொண்ட சிறுமி ஹர்சிதா கடந்த 2 வருடமாக யோகா கற்று வருகிறார்.

இந்தநிலையில் அனைவரும் கண் தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனது இரு கண்களையும் கட்டிக்கொண்டு 5 அடி தொங்கும் வளையத்தில் ’’ஏகாபாத ராஜா கப்போதாசனம்’’ என்னும் யோகாவை 17 நிமிடம் தொடர்ந்து சாதனை படைத்தார். இந்த சாதனையை உலக சாதனையாக நோவா புக் ரெக்கார்ட்ஸ் அங்கிகரித்து அவருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in