ஆந்திராவில் இருந்து சென்னை வந்த 50 கிலோ கஞ்சா: மூவர் கைது

முத்தியால்பேட்டை காவல் நிலையம்
முத்தியால்பேட்டை காவல் நிலையம்ஆந்திராவில் இருந்து சென்னை வந்த 50 கிலோ கஞ்சா; மூவர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்த ஓட்டுநர் உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்காக சென்னை பெருநகர காவல்துறையினர் தனிக்கவனம் செலுத்தி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பல்வேறு இடங்களில் வாகன சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை முத்தியால்பேட்டை போலீஸாருக்கு கஞ்சா பதுக்கி கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மகேந்திர சரக்கு வாகனத்தை போலீஸார் சோதனை செய்ததில் ஓட்டுநரின் இருக்கையின் கீழ் ரகசிய அறையில் 50 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொண்டா ரெட்டி, அனில்குமார், அஞ்சி உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த சரக்கு வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in