இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை: அறிமுகம் செய்கிறார் பிரதமர் மோடி

இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை: அறிமுகம் செய்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவைகளை அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கிவைப்பார் என்று மத்திய அரசாங்கத்தின் தேசிய பிராட்பேண்ட் மிஷன் தெரிவித்துள்ளது

இந்தியாவின் டிஜிட்டல் சேவை மற்றும் இணைய இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவில் 5G சேவைகளை அறிமுகப்படுத்துவார் என்று இந்தியா மொபைல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப அமைப்பாக உள்ள இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC), தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்தியாவின் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) ஆகியவற்றின் முயற்சியில் 5ஜி சேவை வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

குறுகிய காலத்தில் நாட்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகளை 80 சதவீதம் கவரேஜ் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய அஸ்வினி வைஷ்ணவ், "5G இன் பயணம் மிகவும் உற்சாகமாக இருக்கும். பல நாடுகள் 40 முதல் 50 சதவீதம் வரை கவரேஜை எட்டுவதற்கு பல வருடங்கள் எடுத்துக் கொண்டன. ஆனால் நாங்கள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு குறுகிய காலத்தில் குறைந்தபட்சம் 80 சதவீதத்தையாவது எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என தெரிவித்தார்

5ஜி தொழில்நுட்பம் இந்தியாவுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 5 ஜி சேவை 2023 மற்றும் 2040 க்கு இடையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ரூ.36.4 டிரில்லியன் ($455 பில்லியன்) அளவுக்கு பயனளிக்கும் என்று மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய தொழில்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கை மதிப்பிட்டுள்ளது. 2030 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள மொத்த இணைப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு 5G சேவையாக இருக்கும் எனவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in