4ஜியை விட 10 மடங்கு வேகமாக 5ஜி இணைய சேவை இருக்கும்: ஏலத்தை நடத்த மத்திய அரசு ஒப்புதல்

4ஜியை விட 10 மடங்கு வேகமாக 5ஜி இணைய சேவை இருக்கும்: ஏலத்தை நடத்த மத்திய அரசு ஒப்புதல்

5ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலத்தை நடத்த மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 4ஜியை விட 10 மடங்கு வேகமாக 5 ஜி இணைய சேவை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5ஜி சேவைகளை வழங்குவதற்கான ஏலத்தில் வெற்றிபெறும் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும்.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு வணிகம் செய்வதற்கான செலவைக் குறைக்கும் வகையில், 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் மொத்தம் 72097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஜூலை இறுதிக்குள் ஏலம் விட உள்ளதாக தொலைத்தொடர்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் தகவல்கள் தெரிவித்தன. இந்த ஏலத்தில் இந்தியாவின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிகாம் சேவை வழங்குநர்களுக்கு வணிகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதற்காக அலைக்கற்றைகளுக்கான முன்பணத்தை நீக்கியுள்ள மத்திய அரசு, ஏலத்தில் வெற்றிபெற்றவர்கள் 20 மாதாந்திர தவணைகளில் ஏலத்தொகையை செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், "வரவிருக்கும் 5ஜி சேவைகள் மூலமாக புது யுக வணிகங்களை உருவாக்குவதற்கும், நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்துவதற்கும் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in