முதல் நாளிலேயே ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டிய ஏலத்தொகை: விறுவிறுப்பாக தொடரும் 5ஜி ஏலம்!

முதல் நாளிலேயே ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டிய  ஏலத்தொகை: விறுவிறுப்பாக தொடரும் 5ஜி ஏலம்!

5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கிய நேற்று ஒரே நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன.

4.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 72 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது.

அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டலின் பார்தி ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் அதானி குழும நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்களும் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் சுறுசுறுப்பாக பங்கேற்றனர். ஏலத்தின் முதல் நாளிலேயே ஏலத்தொகை ₹ 1.45 லட்சம் கோடியைத் தாண்டிய நிலையில், நான்கு ஏலச் சுற்றுகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஐந்தாவது சுற்று ஏலம் இன்று தொடங்கியுள்ளது. ஏலம் நிறைவடைந்து ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் அலைக்கற்றை ஒதுக்கீடு முடிக்கப்படும் என்றும், செப்டம்பர் மாதத்திற்குள் பல நகரங்களில் 5ஜி சேவைகள் செயல்பட தொடங்கும் எனவும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அலைக்கற்றைகளுக்கான தேவை மற்றும் தனிப்பட்ட ஏலதாரர்களின் உத்தியைப் பொறுத்து ஏலம் இன்னும் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னணியில் இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in