குஜராத்தைச் சேர்ந்த 560 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர்: அமைச்சர் ராகவ்ஜி படேல் தகவல்

மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்
மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்குஜராத்தைச் சேர்ந்த 560 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர்: அமைச்சர் ராகவ்ஜி படேல் தகவல்
Updated on
1 min read

குஜராத்தைச் சேர்ந்த 560 மீனவர்களும், 1,200க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளும் தற்போது பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குஜராத் மீன்வளத்துறை அமைச்சர் ராகவ்ஜி படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ அர்ஜுன் மோத்வாடியாவின் கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ராகவ்ஜி படேல், “நமது மீனவர்கள் சில சமயங்களில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி, பாகிஸ்தான் எல்லைக்கு செல்கிறார்கள். இதனால் 560 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் கடந்த இரு ஆண்டுகளில் 274 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க மாநில அரசு போதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

தூதரக அணுகல் இல்லாததால் பாகிஸ்தானில் அடைக்கப்பட்டுள்ள குஜராத் மீனவர்களின் விடுதலை தாமதமாகிறது என்று மோத்வாடியா சுட்டிக்காட்டினார். கடந்த 2 ஆண்டுகளில், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குஜராத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டில், குஜராத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டனர். மேலும் 35 மீனவர்கள் 2022ல் விடுவிக்கப்பட்டனர் என்று அமைச்சர் தனது பதிலில் கூறினார்.

பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், பாகிஸ்தானால் பிடிபடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தினமும் ரூ.300 இழப்பீடு வழங்குகிறது என்றும் அமைச்சர் கூறினார். 2021ம் ஆண்டில், மொத்தம் 323 குடும்பங்கள் இந்த இழப்பீட்டைப் பெற்றனர், 2022ல் 428 குடும்பங்கள் இந்த இழப்பீட்டைப் பெற்றனர் என அமைச்சர் ராகவ்ஜி படேல் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in