ஊருக்குள் புகுந்த காட்டு யானை...வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு நடந்த விபரீதம்!

ஊருக்குள் புகுந்த காட்டு யானை...வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு நடந்த விபரீதம்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள சப்காரா கிராமத்தில் யானை மிதித்ததில் 52 வயது பெண் உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறை தெரிவித்த தகவல்களின்படி "வியாழக்கிழமை இரவு சப்காரா கிராமத்தில் நுழைந்த யானை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 52 வயதான மூதாட்டி குர்பாரி பாய் என்பவரை மிதித்துக் கொன்றது. ஜார்கண்ட் எல்லையில் உள்ள வனப்பகுதியில் இருந்து இந்த யானை கிராமத்துக்கு வந்தததாகக் கூறப்படுகிறது. ஆரம்பகட்ட நிதியுதவியாக ரூ. 25,000 உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. நாங்கள் ஜார்கண்டில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்பில் உள்ளோம். மேலும் தாக்குதல்கள் தொடராமல் இருக்க யானை இருக்கும் இடத்தைப் கண்காணிக்குமாறு தெரிவித்துள்ளோம் " என்று கூறப்பட்டுள்ளது

கடந்த ஒரு மாதத்தில் ஜாஷ்பூர் மாவட்டத்தில் நடக்கும் இரண்டாவது யானை தாக்குதல் சம்பவம் இதுவாகும். முன்னதாக ஜூன் 1-ம் தேதி இம்மாவட்டத்தில் உள்ள சிரிம்கேலா என்ற கிராமத்தில் யானை மிதித்து ஒருவர் உயிழந்தார். தொடர்ந்து யானை தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதால் இப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in