புத்தாண்டை முன்னிட்டு நெல்லை கோட்டத்தின் சார்பில் 512 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: எந்த, எந்த ஊருக்குத் தெரியுமா?

புத்தாண்டை முன்னிட்டு நெல்லை கோட்டத்தின் சார்பில் 512 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: எந்த, எந்த ஊருக்குத் தெரியுமா?

புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி கோட்டத்தின் சார்பில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை, கோவை உள்பட 512 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலி போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “நெல்லை கோட்ட போக்குவரத்துக்கழகம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பி செல்லும் பயணிகளின் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு வரும் 31, ஜனவரி 1, 2, 3 ஆகிய நான்கு நாள்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 90 பேருந்துகள், கோயம்புத்தூருக்கு 70 பேருந்துகள், திருப்பூருக்கு 55 பேருந்துகள், திருச்சிக்கு 27 பேருந்துகள், மதுரைக்கு 130 பேருந்துகள் என மொத்தமாக 372 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் 31, மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து திருச்செந்தூர் மற்றும் நாலுமாவடிக்கு 140 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ”என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in