இந்தியாவில் இதுவரை 5,10,905 பேர் கரோனாவுக்கு பலி!

இந்தியாவில் இதுவரை 5,10,905 பேர் கரோனாவுக்கு பலி!

இந்தியாவில், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 10 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, ‘கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 920 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 30 ஆயிரத்து 757 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 30 ஆயிரத்து 615- ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 254 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுதும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 492 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 10 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 174 கோடியே 64 லட்சத்து 99 ஆயிரத்து 461 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in