முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை 51 லட்சம் உதவி: அனைவரையும் நெகிழவைக்கும் நெல்லை யாசகர்!

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை 51 லட்சம் உதவி: அனைவரையும் நெகிழவைக்கும் நெல்லை யாசகர்!

முதல்வர் நிவாரண நிதிக்கு 10,000 ரூபாய் வழங்கியுள்ள நெல்லையை சேர்ந்த யாசகர் பாண்டி, இதுவரை 51 லட்சம் வரை உதவி செய்துள்ளார். யாசகரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யாசகர் பாண்டி. கடந்த 2010-ம் ஆண்டு முதல் யாசகம் எடுக்கத் தொடங்கிய இவர், தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு அரசு பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி, தண்ணீர் வழங்கும் இயந்திரம் ஆகியவற்றை வழங்கி உள்ளார்.

கரோனா காலத்தில் இருந்து யாசகம் பெற்று கிடைத்த தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார் பாண்டி. அந்த நிதிக்கு இதுவரை 51 லட்ச ரூபாயை பல கட்டங்களாக வழங்கி உள்ள பாண்டி, முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாயுடன் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பணி நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டதால், வங்கி காசோலை எடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளார்.

யாசகம் பெற்று தனக்கு கிடைத்த பணத்தை பள்ளிகளுக்கும், முதல்வரின் நிவாரண நிதிக்கும் யாசகர் பாண்டி வழங்கி வருவது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in