யானைக்கு 50; விழா எடுக்கும் பக்தர்கள்!

களைகட்டும் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில்
அழைப்பிதழ்
அழைப்பிதழ்

மயிலாடுதுறையில் உள்ள  மயூரநாதர் கோயிலில் உள்ள யானை அபயாம்பிகை,  அந்தக் கோயிலுக்கு வந்து  50-வது ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அந்த யானைக்கு 50 வது ஆண்டு விழா கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

திருக்கோயில்களில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை.  நமது கலாசாரத்தின் ஒரு அங்கமாக யானைகள் திகழ்கின்றன. அந்த வகையில், மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாத ஸ்வாமி திருக்கோயிலுக்கு  அபயாம்பிகை என்ற யானை 1972-ல் கொண்டு வரப்பட்டது. 

அது முதல்  அந்த யானை மயூரநாதருக்கு சேவை செய்து வருகிறது.  பக்தர்களுக்கும் பாந்தமாக ஆசி வழங்கி வருகிறது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்தக் கோயிலில் அபயாம்பிகை  யானை மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  அபயாம்பிகை  இங்கு வந்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அதனை முன்னிட்டு, அபயாம்பிகை யானையின் அரும்பணிகளை போற்றும் விதமாகவும் யானைக்கு சிறப்பு செய்யும் விதமாகவும், 50-வது ஆண்டு விழா கொண்டாட கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை ஜனவரி 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று  இதற்கான விழாவை சிறப்பாக நடத்த  திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதற்காக சிறப்பு அழைப்பிதழ் அச்சடித்து அனைவருக்கும் வழங்கி வருகிறார்கள்.

அபயாம்பிகை யானை மீது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வைத்திருக்கும் அன்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in