அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்; தூக்கி வீசப்பட்ட பெண்கள், சிறுவர்கள்: 50 பேரின் நிலை என்ன?

அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்; தூக்கி வீசப்பட்ட பெண்கள், சிறுவர்கள்: 50 பேரின் நிலை என்ன?

மொஹாலியில் ராட்டினம் ஒன்று திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் அமர்ந்திருந்த சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் ராட்டினம் ஒன்று நேற்று இரவு திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொகாலியில் சுழன்று மேலெழும்பும் ராட்டினத்தில் சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஏறினர். சுழன்றுகொண்டே மேலே சென்ற ராட்டினம் லேசாக சயத் தொடங்கியது. இதனால் ராட்டினத்திலிருந்தவர்கள் அலறினர். அப்போது திடீரென ராட்டினத்தில் ரோப் அறுந்தது.

இதையடுத்து சுழன்றுகொண்டே, வேகமாகத் தரையில் விழுந்து மோதியது. இதில், இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் தூக்கி வீசப்பட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மொகாலி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராட்டினம் சுழன்று தரையில் விழுந்து விபத்து ஏற்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in