ஆலுவாவில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் மலப்புரத்தில் ஐந்து வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை அண்டை வீட்டைச் சேர்ந்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி விளையாட அழைத்துச் சென்று, கொடூரமான முறையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். அவர்கள் தேஞ்சிப்பாலம் போலீஸில் புகார் செய்தனர்.
இந்த தகவல் அறிந்து தப்பியோட முயன்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளியை போலீஸார் கைது செய்து திருரங்கடி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," புலம் பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகளை விளையாட அழைத்துச் செல்வதாக பொய் சொல்லி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி அழைத்துச் சென்ற பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
கடந்த வாரம் கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவாவில் பீகாரில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகளை அஷ்பக் ஆலம் என்ற தொழிலாளி பலாத்காரம் செய்து கொலை செய்தார். இவரும் புலம்பெயர்ந்த தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பலாத்காரச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.