வீட்டில் தூங்கிய 5 வயது சிறுவனை தூக்கிச்சென்ற சிறுத்தை: இரவில் நடந்த சோகம்

சிறுத்தை- மாதிரிப் படம்
சிறுத்தை- மாதிரிப் படம்

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் நேற்று இரவு சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்தான்.

ஜார்க்கண்ட் மாநிலம் பண்டாரியாவின் ரோடோ கிராமத்தில் உள்ள பிரம்மா தேவ் துரி என்பவரது வீட்டிற்குள் நேற்று இரவு சிறுத்தை புகுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த பிரம்மாவின் 5 வயது மகன் விக்ரம் துரியை சிறுத்தை ஆற்றங்கரைக்கு தூக்கிச் சென்றது. சிறுத்தையிடம் சிக்கிய அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் கிராம மக்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக டிஎஃப்ஓ சசிகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சசிகுமார் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in