நிலத்தகராறில் 5வயது சிறுவன் சுட்டுக்கொலை: பீகாரில் பயங்கரம்

சிறுவன் சுட்டுக்கொலை
சிறுவன் சுட்டுக்கொலைநிலத்தகராறில் 5வயது சிறுவன் சுட்டுக்கொலை: பீகாரில் பயங்கரம்

நிலத்தகராறில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 5 சிறுவனைக் சுட்டுக்கொலை செய்த 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சிஹ்மா கிராமத்தைச் சேர்ந்தவர் பிபின் குமார். இவரது மகன் ஆர்யன் குமார்(5). இவர் வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 18 வயது சிறுவன் ஆர்யனை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றார்.

படுகாயமடைந்த ஆர்யனை, அவரது குடும்பத்தினர் ஹாசன்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கெனவே ஆர்யன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆர்யன் குமாரின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இக்கொலை தொடர்பாக பிதான் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிபின்குமாருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் நிலத்தகராறு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக 18 வயது சிறுவன்இ, ஆர்யன் குமாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு தலைமறைவானது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில், சிம்ஹாவில் உள்ள பாட்டி வீட்டில் பதுங்கியிருந்த கொலையாளி சிறுவன் சிக்கினார். அவரை கைது செய்து இக்கொலை தொடர்பாக தொடர்ந் து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் 5 வயது சிறுவன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in