பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு திரும்பிய ஊராட்சி மன்றத் தலைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு திரும்பிய ஊராட்சி மன்றத் தலைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே ஊராட்சி மன்றத் தலைவி வீட்டில் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகில் உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா(62). இவரது மனைவி சாந்தகுமாரி(56). செல்லையா தாசில்தாராக இருந்து ஓய்வுபெற்றவர். சாந்தகுமாரி மறுகால்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

இவர்களுக்கு நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் பண்ணை வீடு ஒன்றும் உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் இளைப்பாறுதலுக்காக பண்ணை வீட்டிற்குச் சென்றிருந்தனர். நேற்று மாலையில் அங்கிருந்து வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 லட்ச ரூபாய் ரொக்கப்பணம், 50 ஆயிரம் மதிப்பிலான டிவி ஆகியவையும் திருடு போயிருந்தது.

இதுகுறித்து மறுகால்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவி சாந்தகுமாரி கொடுத்த புகாரின்பேரில் நாங்குநேரி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in