மதுரை வெடிவிபத்தில் 5 பேர் சாவு: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

மதுரை வெடிவிபத்தில் 5 பேர் சாவு:  பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

மதுரையில் வெடிவிபத்தில் ஐந்து பேர் பலியான பட்டாசு ஆலையின் உரிமையாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறையில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஐந்து தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 13 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில், பட்டாசு ஆலையின் உரிமையாளர் அனுசுயா தேவி, வெள்ளையன், பாண்டி ஆகிய மூன்று பேர் மீதும் 8 பிரிவுகளின்கீழ் சிந்துபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து உரிமையாளர் அனுசியா தேவியை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in