உள்ளாடைக்குள் இருந்த 5 கிலோ தங்கம்; சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்: சென்னை ஏர்போர்ட்டில் தொடரும் கடத்தல்

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம் உள்ளாடைக்குள் இருந்த 5 கிலோ தங்கம்; சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்: சென்னை ஏர்போர்ட்டில் தொடரும் கடத்தல்

மலேசியா மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு உள்ளாடையில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட ரூ.2.83 கோடி மதிப்பிலான 5782 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுத்தொடர்பாக சென்னை விமான நிலையச் சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சென்னைக்கு வந்த வாலிபரை விசாரித்த போது அவர் முன்னுக்குபின் முரணான தகவலைத் தெரிவித்தார்.

அவரை தனி அறையில் கொண்டு பரிசோதித்ததில் அவரது உள்ளாடையில், 2 தங்க சங்கிலிகள், 6 தங்க வளையல்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 31 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள 662 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு அதிகாரிகள் விமானத்தில் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள இருக்கையின் அடியில் பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டனர்.

அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை கடத்தி வந்து இருக்கையின் அடியில் மறைத்து வைத்து சென்றதை கண்டுபிடித்தனர். அதில் இருந்த 1 கோடியே 52 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 120 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 98 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 81 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ 782 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in