தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் அதிரடியாக பணியிடமாற்றம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் அதிரடியாக பணியிடமாற்றம்

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆயுதப்படைப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங் தற்போது சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, சிபிசிஐடியாக பதவி வகித்து வந்த ஷகில் அக்தர் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு சிறைத்துறை டிஜிபியாக இருந்த சுனில் குமார் இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்த அம்ரேஷ் புஜார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐஜியாக ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபியாக இருக்கும் வெங்கடராமன், காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in