மத்திய பிரதேச புலிகளை பாதுகாப்பதற்கு 5 கர்நாடக யானைகள்: வனத்துறை நடவடிக்கை

மத்திய பிரதேச புலிகளை பாதுகாப்பதற்கு 5 கர்நாடக யானைகள்: வனத்துறை நடவடிக்கை

புலிகளின் பாதுகாப்பிற்காக கர்நாடகாவில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்திற்கு ஐந்து யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. அந்த யானைகளுக்கு வனப்பகுதிகளில் புலிகளை பாதுகாக்கும் பணி வழங்கப்படுகிறது.

சத்புரா புலிகள் காப்பகத்தின் ஊழியர்களின் மேற்பார்வையில் டிசம்பர் 22 அன்று கர்நாடகா மாநிலம் கூர்க்கில் உள்ள துபாரே யானைகள் முகாமில் இருந்து ஐந்து யானைகள் டிரக்குகளில் சாலை வழியாக மத்திய பிரதேசம் புறப்பட்டன என்று பென்ச் புலிகள் காப்பக துணை இயக்குநர் ரஜ்னீஷ் சிங் தெரிவித்தார். அந்த யானைகள் நாக்பூர் வழியாகப் பயணம் செய்து ஞாயிற்றுக்கிழமையன்று பென்ச் புலிகள் காப்பகத்தின் குரை மோக்லி சரணாலயத்தை அடைந்தன. யானைகளுக்கான உணவுப் பொருட்களும் ஒரு டிரக்கில் கொண்டு செல்லப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

தற்போது, பென்ச் புலிகள் காப்பகத்தில் ஐந்து யானைகள் உள்ளன. மூத்த யானையான சரஸ்வதி உட்பட அந்த யானைகளின் சேவை காலம் முடிவடைந்துவிட்டது என்று வனத்துறை அதிகாரி கூறினார். மத்திய பிரதேசத்தில் கன்ஹா, பாந்தவ்கர், சத்புரா, பென்ச், பன்னா மற்றும் சஞ்சய்-துப்ரி உள்ளிட்ட பல புலிகள் காப்பகங்கள் உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in