சத்தீஸ்கரை அதிரவைத்த நிலநடுக்கம்: அச்சத்தில் உறைந்த மக்கள்

சத்தீஸ்கரை அதிரவைத்த நிலநடுக்கம்: அச்சத்தில் உறைந்த மக்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூரில் இன்று காலை 4.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூருக்கு மேற்கு-வடமேற்கில் 65 கிமீ தொலைவில் அதிகாலை 5.28 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அட்சரேகை 23.33 மற்றும் தீர்க்கரேகை 82.58 ஆகவும், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சொத்துகள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் பொதுமக்களை சந்தித்து நிலைமையை எடுத்துரைத்து வருகின்றனர்.

முன்னதாக, ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in