வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட 46 துப்பாக்கிகள்: டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய கணவன், மனைவி!

வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட 46 துப்பாக்கிகள்: டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய கணவன், மனைவி!

வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட 46 துப்பாக்கிகளுடன் டெல்லி விமான நிலையத்தில் கணவன், மனைவி இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இன்று வந்த கணவன், மனைவியைப் பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் வியட்நாமில் இருந்து 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 46 துப்பாக்கிகளை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த கணவன், மனைவியான ஜகத்சிங், ஜஸ்விந்தர் கவுர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 17 மாத பெண் குழந்தையுடன் விமானத்தில் வந்தது தெரிய வந்தது. ஏற்கனவே இவர்கள் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 துப்பாக்கிகளைக் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. யாருக்காக இவர்கள் துப்பாக்கிகளைக் கடத்தி வந்தார்கள் என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி 46 துப்பாக்கிகளைக் கடத்தி வந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in