
கூகுள் நிறுவனத்தின் இந்திய ஊழியர்களில் 453 பேர் நேற்றிரவு அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கூகுள் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவரான சஞ்சய் குப்தா நேற்றிரவு அனுப்பிய மெயிலில் இந்த பணி நீக்கத் தகவல்களை வழங்கியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த பரவலான ஊழியர்கள் இந்த பணிநீக்கப் பட்டியலில் அடங்குவார்கள். இவை கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் சிஇஓ கூகுள் பிச்சை ஏற்கனவே அறிவித்த பணியாள் குறைப்பின் அங்கமா அல்லது புதிய வேலை நீக்கமா என்பது குறித்தான உடனடித் தகவல்கள் இல்லை.
முன்னதாக ஜனவரி மாதம் சுந்தர் பிச்சை வெளியிட்ட தகவலின்படி, கூகுள் உட்பட அல்ஃபாபெட் நிறுவனத்தின் சுமார் 6% ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு ஆளாவதாக அறிவித்திருந்தார். இது அல்ஃபாபெட்டின் மொத்த ஊழியர்களில் 12 ஆயிரம் பேர் ஆவர். இதன்படி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பணிபுரியும் அல்ஃபாபெட் நிறுவனத்தின் ஊழியர்கள் படிப்படியாக பணி நீக்கத்துக்கு ஆளாவார்கள். அடுத்து வரும் தினங்களிலும் கூடுதல் எண்ணிக்கையில் கூகுள் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.