அதிர்ச்சி: அந்தமான் கடல் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்ட திட்டுகளுக்கு இடையேயான பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 6க்கும் மேல் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதே போல் கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதே போல் இந்தியா, மியான்மர், நேபாளம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது.

நிலநடுக்க விவரம்
நிலநடுக்க விவரம்

இன்று காலை வங்கக்கடலில் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் முந்தைய நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் அந்தமான் கடல் பகுதியில், 4.5 என்ற அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in