சிஆர்பிஎப், பிஎஸ்எப் வீரர்கள்
சிஆர்பிஎப், பிஎஸ்எப் வீரர்கள்3 ஆண்டுகளில் 436 சிஆர்பிஎப், பிஎஸ்எப் வீரர்கள் தற்கொலை: மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

3 ஆண்டுகளில் 436 சிஆர்பிஎப், பிஎஸ்எப் வீரர்கள் தற்கொலை: மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சிஆர்பிஎப், பிஎஸ்எப் போன்ற மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த மொத்தம் 436 பேர் கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், 2022ல் மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 135 பணியாளர்களும், 2021ல் 157 பேரும், 2020ல் 144 பேரும் என மொத்தம் 436 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பதிலளித்தார்.

மேலும், மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் போன்றவற்றில் நடக்கும் தற்கொலைகள் தொடர்புடைய ஆபத்து காரணிகள் மற்றும் தொடர்புடைய ஆபத்துக் குழுக்களைக் கண்டறிந்து, தற்கொலைகள் மற்றும் சகோதர கொலைகளைத் தடுப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in