சிக்கிமில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானையும் அச்சமூட்டிய பூகம்பம்

சிக்கிமில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானையும் அச்சமூட்டிய பூகம்பம்

சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலையில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தின் தகவல்களின்படி, சிக்கிமில் உள்ள யுக்சோமுக்கு வடமேற்கே அதிகாலை 4.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக நிலநடுக்கங்கள் பதிவாகி வருகிறது. நேற்று பிற்பகல் அசாமின் நாகோனில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று சிக்கிமில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் முன்பு, சனிக்கிழமையன்று குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

இந்த நிலையில், இன்று காலை ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு நகரமான பைசாபாத் நகருக்கு தென்கிழக்கே 100 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்த நிலநடுக்கம் காலை 6:47 மணியளவில் இப்பகுதியைத் தாக்கியது மற்றும் அதன் ஆழம் 135 கி.மீ இருந்தது. ஆனால், இதனால் உயிர்கள் அல்லது உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை என நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்குள் ஆப்கானிஸ்தான் நாட்டை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக ஜனவரி 22 அன்று, ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு தென்கிழக்கே 79 கிமீ தொலைவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in