இந்தியாவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 4,100 பேர் மரணம்: காரணம் என்ன?

இந்தியாவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 4,100 பேர் மரணம்: காரணம் என்ன?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,100 உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 3-வது கரோனா அலை ஓய்ந்து வருகிறது. பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் கரோனாவுக்கு 4,100 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது என்றும் இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,18,032 ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு நேற்று 83 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,100 பேர் உயிரிழந்துள்ளதாவும், இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,20,855 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 4,005 பேரும், கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 79 பேரும் இன்றைய கரோனா உயிரிழப்பில் சேர்க்கப்பட்டதே இந்த உயர்வுக்கு காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 2,349 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாவும் கரோனா தொற்றுக்கு தற்போது 16,741 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 24 மணி நேரத்தில் மட்டும் 29,07,479 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in