பொங்கல் தொடர் விடுமுறை: விவேகானந்தர் மண்டபத்திற்கு 3 நாட்களில் 40 ஆயிரம் பேர் வருகை

விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் நினைவு மண்டபம்


பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று 40 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

சர்வதேச புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றர். இங்கு சுற்றுலா வரும் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

இதன்பின்னர், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். ஐயப்ப பக்தர்களின் சீசன், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரிக்கு ஏராளமானோர் வந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர். சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கடந்த 3 நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை படகுகள் இயக்கப்பட்டன. இதன்படி ஜன.15-ல் 13 ஆயிரத்து 400 பேர், ஜன.16-ல் 14 ஆயிரத்து 200 பேர், நேற்று (ஜன.17) 13 ஆயிரத்து 100 பேர் என 40 ஆயிரத்து 700 பேர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in