சென்னை வந்த ரயிலில் வைர நகைகள், 40 லட்சம் பறிமுதல்: ஆந்திரா வாலிபரிடம் விசாரணை

சென்னை வந்த ரயிலில் வைர நகைகள், 40 லட்சம் பறிமுதல்:  ஆந்திரா வாலிபரிடம் விசாரணை

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 40 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ரயிலில் கடத்துவதைத் தடுக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 1-ல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு இன்று வந்த ஷிவமொக்கா விரைவு ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீஸார் அவரது உடமைகளைச் சோதனை செய்தனர். அதில் 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் சேதமடைந்த வைர நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோபால்(35) என்பதும், பையில் எடுத்துவந்த பணம் மற்றும் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதனையடுத்து பணம் மற்றும் நகைகளைப் பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், கோபாலை ஆர்பிஎஃப் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்குப் பின் பணம் மற்றும் நகைகளுடன் கோபாலை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in