சிக்கிம் வெள்ளப் பாதிப்பு
சிக்கிம் வெள்ளப் பாதிப்பு

சிக்கிம் வெள்ளத்தில் 40 பேர் பலி... 76 பேர் மாயம்... அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளதாகவும், 76 பேர் மாயமாகியுள்ளதாகவும் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமயமலைக்கு அருகே உள்ள சிக்கிம் மாநிலத்தின் லோனாக் பணிப்பாறை கடந்த அக்டோபர் 3-ம் தேதி திடீர் மேக வெடிப்பு காரணமாக உருகியது. இதனால் தீஸ்தா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சிக்கிம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் இதுவரை 4,418 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 1,852 பேரை பேரிடர் மீட்பு படையினர் 19 நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கை
மீட்பு நடவடிக்கை

இதனிடையே வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களில் 40 பேர் உயிரிழந்திருப்பதாக சிக்கிம் மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மாயமான 76 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை சிக்கிம் மாநில அரசு முன்னெடுத்துள்ளது. 8,733 தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ராணுவம் தீவிரம்
தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ராணுவம் தீவிரம்

இந்திய ராணுவப் படையின் திரிசக்தி பிரிவு சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வடக்கு சிக்கிம் பகுதியில் ரபோம் கிராமத்தில் சிக்கியிருந்த 97 பேரை நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராணுவத்தினர் மீட்டுள்ளனர். கடும் வெள்ளத்தால் உருக்குலைந்து போயுள்ள சிக்கிம் மாநிலத்த்தில், சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

தொடர் மீட்பு பணிகளில் ராணுவம்
தொடர் மீட்பு பணிகளில் ராணுவம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in