4 வயது சிறுமியிடம் 62 வயது முதியவர் பாலியல் அத்துமீறல்: ஆயுள் தண்டனை வழங்கியது போக்சோ நீதிமன்றம்

போக்சோ சிறப்பு நீதிமன்றம்
போக்சோ சிறப்பு நீதிமன்றம்4 வயது சிறுமியிடம் 62 வயது முதியவர் பாலியல் அத்துமீறல்: ஆயுள் தண்டனை வழங்கியது போக்சோ நீதிமன்றம்

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 62 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி காஞ்சிபுரம் (இ) செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அனுமந்த புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகர்(62). கடந்த 7.3.2019 அன்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை மனோகர் பாலியல் பலாத்காரம் செய்ததாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மனோகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறிவியல் பூர்வமாக உறுதியானது.

இதனையடுத்து குற்றவாளி மனோகருக்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், உடந்தையாக இருந்த அவரது மனைவி சந்திராவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், தவறினால் ஆறு மாதம் சிறைத்தண்டனையும் வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in