4 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர்: ஸ்டாலினுக்கு கலாஷேத்ரா மாணவிகள் எழுதிய அதிர்ச்சி கடிதம்

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்4 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர்: ஸ்டாலினுக்கு கலாஷேத்ரா மாணவிகள் எழுதிய அதிர்ச்சி கடிதம்

கல்லூரி பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் பாலியில் துன்புறுத்தல் அளித்து வருவதாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலா ஷேத்ரா பவுண்டேஷன்
கலா ஷேத்ரா பவுண்டேஷன்4 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர்: ஸ்டாலினுக்கு கலாஷேத்ரா மாணவிகள் எழுதிய அதிர்ச்சி கடிதம்

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மிணிதேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில், விசாரணை நடத்துமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து காவல் துறை விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்பட்ட கலாஷேத்ரா மாணவி, தன் பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் சிலர் பொய்யாக பாலியல் புகாரை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும், அது போன்று எந்த சம்பவமும் நிகழவில்லை என்றும், அவதூறு பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் திடீரென தமிழக டிஜிபிக்கு அனுப்பிய புகாரை திரும்பப்பெற்றது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி தன் பெயரில் பொய்யான புகார் சமூக வலைதளத்தில் பரவுவதாக தெரிவித்த காரணத்தினால் தமிழக போலீஸார் விசாரிக்கும் படி கூறியதை வாபஸ் பெற்றதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது.

உள்ளிருப்பு போராட்டம்
உள்ளிருப்பு போராட்டம்4 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர்: ஸ்டாலினுக்கு கலாஷேத்ரா மாணவிகள் எழுதிய அதிர்ச்சி கடிதம்

இந்த சூழலில், கலாஷேத்ராவில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா திடீரென மூன்று மணி நேரமாக மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். புகாரை வாபஸ் வாங்கிய பின், மகளிர் ஆணைய தலைவர் ஏன் விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவ, மாணவியரிடம் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், கலா ஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணையக் குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் ஹரி பத்மன், அலுவலர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலாஷேத்ராவில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கி இன்றும் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் மின்னஞ்சல் மூலமாக அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், கலாஷேத்ரா கல்லூரி மாணவர்கள் அமைப்பு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், " கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் பாலியில் துன்புறுத்தல் அளித்து வருகின்றனர். அவர்களைக் கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் நடனத் துறையின் தலைவர் ஆகியோர் காப்பாற்றி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in