வீட்டிற்குள் சூரிய ஒளிப்படாமல் வளர்க்கப்பட்ட வெளிநாட்டு கஞ்சாச்செடி: சென்னையில் சிக்கிய வாலிபர்கள்

நவீன வசதிகளுடன் கஞ்சா வளர்ப்பு
நவீன வசதிகளுடன் கஞ்சா வளர்ப்புவீட்டிற்குள் சூரியஒளி படாமல் வளர்க்கப்பட்ட வெளிநாட்டு கஞ்சாச்செடி: சென்னையில் சிக்கிய வாலிபர்கள்

சென்னையில் கிரிப்டோ கரன்சி மூலம் வெளிநாடுகளில் இருந்து வாங்கிய கஞ்சாச் செடியினை வீட்டினுள் சூரிய ஒளிப்படாமல் ஆய்வகம் போல அமைத்து, வளர்த்து விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த மாடபாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சியாம் சுந்தர், ஸ்ரீகாந்த், சக்திவேல்,  நரேந்திரக்குமார். நண்பர்களான இவர்கள், சென்னையின் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர்.

அந்த வீடுகளில் சூரிய ஒளிப்படாமல்,  பிரத்யேகமாக அதற்கான விளக்குகள்,  குறித்த நேரத்திற்கு கஞ்சாச்செடிக்கு தேவையான தண்ணீரை வழங்க தானியங்கி மோட்டார்கள்,  பதப்படுத்த ஆய்வகம் போன்று வீட்டின் அறையையே தயார் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிரிப்டோ கரன்சி மூலம் வெளி நாடுகளில் இருந்து கஞ்சாச் செடிகளை வரவழைத்து அந்த ஆய்வகங்களில் வளர்த்துள்ளனர். அதனை அந்தப்பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதுக்குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதனையடுத்து சென்னை வடக்கு மண்டல உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டனர்.

மாடபாக்கத்தைச் சேர்ந்த சக்திவேலை மடக்கிப்பிடித்து போலீஸார் விசாரித்ததில் அவன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த கஞ்சாச்செடிகளை வளர்த்து கிராம் 1000 முதல் 1500 வரை விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவரது கூட்டாளிகள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் நவீன ஆய்வகம் அமைத்து கஞ்சாச் செடி வளர்த்து விற்பனை செய்துள்ளது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in