
மிசோரம் மாநிலத்தில் 100 டெட்டனேட்டர்கள் மற்றும் 6.35 கிலோ கஞ்சாவுடன் மியான்மரைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய எல்லையில் உள்ள மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் மிசோரம் காவல் துறையின் கூட்டுக்குழு சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
மிசோரம்- மியான்மர் எல்லையில் இரண்டு இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 100 டெட்டனேட்டர்கள் மற்றும் 6.35 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில்,100 டெட்டனேட்டர்களுடன் இரண்டு மியான்மரைச் சேர்ந்தவர்களைப் பிடித்ததுடன் அவர்கள் எதற்காக இவ்வளவு டெட்டனேட்டர்களைக் இங்கு கொண்டு வந்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல 6.35 கிலோ கஞ்சாவுடன் மியான்மரைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதே மாவட்டத்தில் உள்ள சோட் கிராமம் அருகே ரூ.4.69 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.