எண்ணூர் கடல் அலையில் சிக்கி மாயமான 4 வட மாநில தொழிலாளர்கள்: குளிக்கச்சென்றபோது விபரீதம்

எண்ணூர் கடல் அலையில் சிக்கி மாயமான 4 வட மாநில தொழிலாளர்கள்: குளிக்கச்சென்றபோது விபரீதம்

வடசென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுமார் 16 வடமாநில தொழிலாளர்கள் கடல் குளிக்க சென்றுள்ளனர். அதில் நால்வர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகி உள்ளனர்.

எண்ணூர் ஆண்டாள் குப்பம் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் விடுமுறை தினமான இன்று பொழுதை கழிப்பதற்காக கடற்பகுதிக்கு வந்து குளித்துள்ளனர். அப்போது 4பேர் மட்டும் திடீரென உருவான ராட்சத அலையில் சிக்கி மாயமாக, மீதமிருந்த 12பேரும் கரைக்கு திரும்பியுள்ளனர்

கரைக்கு திரும்பியவர்கள் எண்ணூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  கடல் அலையில் சிக்கி காணமல் போயிருக்கும் முஸ்தகீன்(22), இப்ராஹிம்(22), வஷீம்(26), புர்சான்(28) ஆகிய நால்வரையும் மீட்கும் பணியை தீயணைப்பு துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த பகுதிகள் பலமுறை இது போன்று கடல் குளிக்க சென்றவர்கள் அலையில் சிக்கி மாயமாகியுள்ளனர். இந்த பகுதியில் குளிக்க வேண்டாம் என போலீஸார் அவ்வபோது எச்சரிக்கை பதாகைகள் வைத்தும், ரோந்து பணியில் ஈடுபட்டும் கூட இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in