கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் அதிரடி காட்டி வரும் போலீஸ்: மேலும் 4 பேர் சிக்கினர்

கனியாமூர் பள்ளி
கனியாமூர் பள்ளி

சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி வன்முறைச் சம்பவத்தின் போது, பள்ளி சொத்துகளையும், காவல் வாகனத்தையும் தீ வைத்ததாக மேலும் 4 பேரை சிறப்புப் புலனாய்வு படை பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி கடந்த மாதம் 13-ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்ற வன்முறையின் போது, பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் பள்ளிக் கட்டிடத்தில் இருந்த பள்ளியின் உடமைகள், வாகனங்கள், ஆவணங்கள் மற்றும் காவல் துறை வாகனம் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழுவினர் பல தனிப்படைகளாக பிரிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் விசாரணை அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை, சமூக வலைதள பதிவுகள், கண்காணிப்புக் கேமரா பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் கைது செய்து வருகின்றனர். இதுவரை 300 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இன்று மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கட்டிடத்தில் இருந்த மேஜை நாற்காலி போன்ற பள்ளிக்குச் சொந்தமான உடமைகளை சேதப்படுத்தியதாக கள்ளக்குறிச்சி ஏர்வாய்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்(22) மற்றும் சங்காரபுரத்தை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை வாகனத்தின் மீது கல்வீசி தீ வைத்ததாக சின்னசேலத்தை அடுத்த மணிவர்மா(21) மற்றும் உளுந்தூர்பேட்டையை அடுத்த பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்த முருகன்(20) ஆகியோரையும் வீடியோ பதிவில் உள்ள காட்சியினைக் கொண்டு, சிறப்பு புலனாய்வுப் படையினர் கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in