கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்: 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி

கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்: 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி

மும்பை அருகே கடலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

மும்பை கடற்கரையிலிருந்து 60 நாட்டிகல் மைல் தொலைவில் 2 விமானிகள் மற்றும் 7 பேருடன் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் இன்று பறந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விழுந்தது நொறுங்கியது. இதில் 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். ஓஎன்ஜிசி நிறுவன எண்ணெய் கிணறு அருகிலேயே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in