கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து... 5 பேர் உடல் கருகி பலி!

கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து... 5 பேர் உடல் கருகி பலி!

கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு குடோன் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டையில் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு குடோனில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 3க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகிய நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மளமளவென பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை, தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்து வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் மேல் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in