அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் … சுங்கச்சாவடியில் மோதி 4 பேர் பலி: பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்

அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் … சுங்கச்சாவடியில் மோதி 4 பேர் பலி: பதைபதைக்க  வைக்கும் வீடியோ வைரல்

கர்நாடக மாநிலத்தில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடியில் மோதி நான்கு பேர் பலியாகினர். இந்த கோர விபத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் ஷிரூரில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. கடலோர மாவட்டமான ஷிரூவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறத. இதன் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை இந்த சுங்கச்சாவடியை ஒரு ஆம்புலன்ஸ் கடக்க முயன்றது. இதைக் கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் சுங்கச்சாவடியில் உள்ள மூன்று தடுப்பு கட்டைகளில் இரண்டு அகற்றப்பட்டுள்ளது. மற்றொன்றை சுங்கச்சாவடி ஊழியர் அகற்றிக் கொண்டிருன்தனர். அப்போது சாலையில் இருந்த மழைநீர் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேகமாக வந்த ஆம்புலன்ஸ் சங்கச்சாவடியில் இருந்த கேபினில் மோதியது.

இதில் ஹொன்னவரிலிருந்து குண்டப்பூர் மருத்துவமனைக்குச் சென்ற பெண் நோயாளி, அவருடன் இருந்த இரண்டு அட்டண்டர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் என நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் ஓட்டுநர் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதும் கோர விபத்து தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in