திடீரென வெடித்த முன்பக்க டயர்; கார் மீது மோதிய அரசு பேருந்து: 5 பேருக்கு நேர்ந்த துயரம்


திடீரென வெடித்த முன்பக்க டயர்; கார் மீது மோதிய அரசு பேருந்து: 5 பேருக்கு நேர்ந்த துயரம்

முன்பக்க டயர் வெடித்ததால் நிலை தடுமாறிய அரசுப் பேருந்து எதிரே வந்த கார்களின் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து வாலாஜாபேட்டை வழியாகத் திருத்தணி வரையில் செல்லும் அரசு பேருந்து, கீழ்புதுப்பேட்டை வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதன் காரணமாக நிலைகுலைந்த பேருந்து எதிரில் அடுத்தடுத்து வந்த இரண்டு கார்களின் மீது மோதியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறினர்.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அப்போது பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவர்களுக்கு முதலுதவி செய்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுக் காயமடைந்தவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வாலாஜாபேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in