தங்கத்தை உருக்கி இப்படியெல்லாம் கடத்துகிறார்கள்; சிக்கிய 4 பயணிகள்: திருச்சி ஏர்போர்ட்டில் அதிரடி

தங்கத்தை உருக்கி இப்படியெல்லாம் கடத்துகிறார்கள்; சிக்கிய 4 பயணிகள்: திருச்சி ஏர்போர்ட்டில் அதிரடி

வெளிநாட்டிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 222 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது விமானத்தில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், பயணிகள் 4 பேரை சந்தேகத்தின் பேரில் அவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் அணிந்திருந்த பனியன்களை கழற்றியபோது அதில் 222 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு 11.50 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கத்தை உருக்கி பனியனின் ஊற்றி கடத்தி வந்த 4 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in