திருப்பூர் ஜவுளிக்கடை உரிமையாளரிடம்ரூ.57 லட்சம் மோசடி: பணத்தைக்கேட்ட முதியவருக்கு உருட்டுக்கட்டை அடி

திருப்பூர் ஜவுளிக்கடை உரிமையாளரிடம்ரூ.57 லட்சம் மோசடி: பணத்தைக்கேட்ட முதியவருக்கு உருட்டுக்கட்டை அடி

திருப்பூரைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.57 லட்சம் மோசடி செய்த மதுரையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் வெள்ளக்கோவில் உப்புபாளையம் சாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தினார். இவரிடம் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, மகாலட்சுமி, கார்த்திக், பாரதி சரவணன், ஆகியோர் கடனுக்கு ரூ.57 லட்சம் வரை ஜவுளி வாங்கினர். தொழில் நஷ்டத்தால் விரக்தியடைந்த கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து ராஜேஸ்வரி உள்பட 4 பேரிடமும் கடன் தொகையை கார்த்திகேயனின் மனைவி நம்பு புவனேஸ்வரி தனது தந்தையாருடன் சென்று கேட்டார். இந்தத் தொகையைத் திரும்ப, திரும்ப கேட்டதால் ஆவேசமடைந்த 4 பேரும் நம்பு புவனேஸ்வரியின் தந்தையை ஆயுதம், உருட்டுக் கட்டையால் தாக்கினர். இது குறித்து நம்பு புவனேஸ்வரி புகாரில் மதுரை தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேஸ்வரி, மகாலட்சுமி, கார்த்திக், பாரதி சரவணன் ஆகிய 4 பேரையும்   கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in