வாகனத்தை பார்த்து தெறித்து ஓடிய வாலிபர்கள்: மடக்கிப் பிடித்த போலீஸார் அதிர்ச்சி

வாகனத்தை பார்த்து தெறித்து ஓடிய வாலிபர்கள்: மடக்கிப் பிடித்த போலீஸார் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சாவை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ஏரிக்கரை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார், நின்றிருந்த 4 இளைஞர்களைக் கண்டனர். அவர்களை விசாரிக்கலாம் என்று அருகில் சென்றபோது போலீஸார் வாகனத்தைக் கண்டதும் அந்த இளைஞர்கள் ஓடத் தொடங்கினர். இதையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்தப் போலீஸார், அவர்களை சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும், விற்பனை செய்வதற்காக அதனை வாங்கிச் செல்வதும் தெரிய வந்தது.

பின்னர் போலீஸார் அவர்களை கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, சின்னசேலம் வட்டம் தோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கருப்பன், நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தாவுத் மகன் முகமது ரபிக், கள்ளக்குறிச்சி கரியப்பா நகரை சேர்ந்த பாபு மகன் கமலக்கண்ணன், மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் உதயசூரியன் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்த தனிப்படை போலீஸார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் இருந்த கஞ்சா யாரிடமிருந்து வாங்கப்பட்டது? எங்கிருந்து கொண்டுவரப்பட்டது?, எந்த பகுதியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in