99 ரன்னில் ஆல் அவுட்; தென் ஆப்பிரிக்கா வீரர்களை தெறிக்கவிட்ட குல்தீப்: தொடரை வென்றது இந்தியா!

99 ரன்னில் ஆல் அவுட்; தென் ஆப்பிரிக்கா வீரர்களை தெறிக்கவிட்ட குல்தீப்: தொடரை வென்றது இந்தியா!

3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் குல்தீப் யாதவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி 99 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி டி20 போட்டியில் விளையாடியது. இந்த தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதன் பின்னர் ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடரை யார் கைப்பற்றுவது என்று நிர்ணயிக்கக் கூடிய 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தென் ஆப்பிரிக்கா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தனர். தொடக்க வீரர்களாக மாறன்- டி காக் களமிறங்கினர். இந்த ஜோடி சிறிது நேரம் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. 6 ரன் எடுத்திருந்த டி காக், வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ரிஷா 3 ரன்னிலும், மார்க்ரம் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். தொடக்க வீரர் பாலன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேலாஷன் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.

இந்திய சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 27.1 ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99-ல் சுரண்டது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், அஹமத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் தவான் களமிறங்கினார். இவர் 8 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த கிருஷ்ணன் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். 49 ரன் எடுத்திருந்த ஹீல், நகிடி பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் இந்திய அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.1 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in