துருக்கியை துரத்தும் துயரம்: கடந்த 66 மணிநேரத்தில் 37 நிலநடுக்கங்கள் - அச்சத்தில் உறைந்த மக்கள்

துருக்கி துயரம்
துருக்கி துயரம்துருக்கியை துரத்தும் துயரம்: கடந்த 66 மணிநேரத்தில் 37 நிலநடுக்கங்கள் - அச்சத்தில் உறைந்த மக்கள்

மத்திய துருக்கியில் கடந்த 66 மணி நேரத்தில் 37 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் மத்திய துருக்கியில் 37வது நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய துருக்கியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட 37வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 6 அன்று ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44,218 ஆக உயர்ந்துள்ளது. சிரியாவின் சமீபத்திய அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை 5,914 உடன் சேர்த்து, இரு நாடுகளிலும் ஒருங்கிணைந்த இறப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நடந்த பேரழிவுகரமான நிலநடுக்கங்களுக்குப் பிறகு துர்க்கியில் வீடுகளை மீண்டும் கட்டும் பணி தொடங்கிய நிலையில், மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in