10ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கு கடலோரக் காவல்படையில் வேலை வாய்ப்பு! முழு விவரம்!

இந்திய கடலோரக் காவல்படை
இந்திய கடலோரக் காவல்படை

இந்திய கடலோரக் காவல்படையில் காலியாக உள்ள 350 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 22ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

இந்திய கடலோரக் காவல்படையில் நாவிக், நேவிக் போன்ற 350 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இப்பணிகளுக்கு கல்வி தகுதியாக 10ம் வகுப்பு, டிப்ளமாவில் தேர்ச்சி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு 18முதல் 28 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு இந்திய கடலோரக் காவல்படை (ICG) இணைய முகவரியை க்ளிக் செய்யலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in