ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய 34 நாட்டு வெடிகுண்டுகள்: கூட்டாளிகளுடன் சிக்கிய ரவுடி

ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய 34 நாட்டு வெடிகுண்டுகள்: கூட்டாளிகளுடன் சிக்கிய ரவுடி

ரவுடியிடமிருந்து கைப்பற்றப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் காவல்துறையினர் வெடிக்கச் செய்து செயலிழக்கச் செய்தனர்.

சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் (40). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர் தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் இவரைக் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி பூந்தமல்லியில் காரில் சென்றபோது புளியந்தோப்பு தனிப்படை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பட்டாக்கத்திகள் சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அவரது கூட்டாளிகளான விக்ரமாதித்தன் (37), அருண் (26), பிரதீப் (27), பிரசாந்த் (27) ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 34 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் மற்றும் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலையில் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பாதுகாப்புடன் வெடிக்கச் செய்து செயல் இழக்கச் செய்தனர். ஒரே நேரத்தில் 34 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதால் அந்த குப்பைக் கிடங்கு முழுவதும் புகை படர்ந்து காணப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in