நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தார்: கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்!

நண்பருடன் சேர்ந்து  பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தார்: கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்!

தனது மனைவியை நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 32 வயது நபர் மீது புனே வர்ஜே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் 32 வயதான அரசு ஒப்பந்ததாரர். அவர் 2019-ம் ஆண்டு முதல் தனது மனைவியுடன் இயற்கைக்கு மாறாக வலுக்கட்டாயமாக உடல் ரீதியான உறவு வைத்து சித்திரவதை செய்துள்ளார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக புகார்தாரர் தெரிவித்த தகவல்களின்படி, கணவர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக படம்பிடித்து மிரட்டியதாகவும் தெரிவித்தார். மேலும், தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமாவது கூறினால், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் தனது கணவர் மிரட்டியதாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார். கணவரின் மிரட்டலுக்குப் பயந்து இதுவரை நடந்த கொடுமைகளை யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தனது மாமனார், மாமியாருக்கும் தெரியும் என்றும் அந்த பெண் தெரிவித்தார். தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸார் கூறினர்.

இந்த வழக்கில் அந்த பெண்ணின் கணவர் சவான் மற்றும் அவரது பெற்றோர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in